பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழகத்திற்கென தனிப்பெருமையை தேடித் தந்த பெருந்தலைவர், இந்திய அரசியலை வழிநடத்திய கிங்மேக்கர், கல்விக்கண் திறந்த மேதை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
எளிமை, தூய்மை, நேர்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்டு தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டு மக்களுக்காகவே அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெருமையையும் புகழையும் அவர் பிறந்த இந்நன்னாளில் போற்றிக் கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்திற்கென தனிப்பெருமையை தேடித் தந்த பெருந்தலைவர், இந்திய அரசியலை வழிநடத்திய கிங்மேக்கர், கல்விக்கண் திறந்த மேதை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 15, 2024
எளிமை, தூய்மை, நேர்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்டு தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டு மக்களுக்காகவே… pic.twitter.com/lNhlKFO6ka