No results found

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான கணவருக்கு பாதுகாப்பு கோரி காவல் ஆணையருக்கு மனைவி மனு


    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

    சென்னையில் கடந்த 5 ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை வழக்கில் கைதான 11 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஒருவரான திருவேங்கடம் நேற்று காலை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    விசாரணையின் போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திருவேங்கடம் காவலர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதற்கு போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் திருவேங்கடம் சம்பவ இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்த ஒரு வார காலத்திற்குள் அதில் தொடர்புடனைய கைதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி இருக்கும் பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال