No results found

    2ம் கட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த ஒப்பந்தம் கையெழுத்து


    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கட்டம் II-ல் 15 மெட்ரோ நிலையங்களுக்கான வடிவமைப்பை மதிப்பாய்வு செய்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இது மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து பயணிகளும் எளிதாக அணுகக்கூடியவகையில் வசதிகளை மேம்படுத்துவதை உறுதி செய்கிறது.

    இந்தியாவின் சீரான வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நிலைய வடிவமைப்புகளை மேம்படுத்துவதற்காக, இந்த ஒப்பந்தம் M/s v-shesh Learning Services Private Limited நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பிப்ரவரி 18, 2025 அன்று வழங்கப்பட்ட ஏற்பு கடிதத்திலிருந்து 180 நாட்களுக்குள் முடிக்கப்பட உள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் ரேகாபிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மற்றும் M/s v-shesh Learning Services Private நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் மற்றும் இணை நிறுவனர் P.ராஜசேகரன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எளிதாக அணுகக்கூடிய போக்குவரத்து அமைப்பை உருவாக்க உறுதி பூண்டுள்ளது. இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் அனைவரும் அணுகக்கூடிய வகையில் சீரான வழிகாட்டுதல்கள் மற்றும் தரங்களுக்கு ஏற்ப நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

    கட்டம் II-ல் 15 மெட்ரோ ரெயில் நிலையங்களில் வடிவமைப்பை மதிப்பாய்வு செய்வதற்காக M/s v-shesh Learning Services Private ஆலோசனை நிறுவனம், கட்டம்-I-ல் செயல்பாட்டில் உள்ள 32 மெட்ரோ ரெயில் நிலையங்களில் தணிக்கையை மேற்கொண்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال